சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி!… தற்கொலைக்கு முன் எழுதிய கடைசி வரிகள்- கடிதம் சிக்கியது

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையுடன் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி அரியமங்கலத்தின் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு(வயது 27), மிட்டாய் கடை வைத்துள்ளார்.

இவருக்கும் தாமினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 7 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சொகுசாக வாழ ஆசைப்பட்ட தாமினிக்கும், பிரபுக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது.

மிட்டாய் கடையில் வருமான குறைவாக இருப்பதால் பிரபுவால், தாமினி ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தாமினி, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பல முறை தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வர முயன்றும் பிரபு தோற்றுப்போனார்.

இந்த நிலையில் மனமுடைந்த பிரபு, கடந்த 21ம் தேதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம் பக்கத்தினர், அவரை காப்பாற்றி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பிரபு பரிதாபமாக பலியானார்.

இதனையடுத்து அரியமங்கலம் பொலிசார் நடத்திய விசாரணையில், பிரபு 3 பக்கம் எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.

அதில், ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி, கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்,

சமாதானம் பேசி அழைத்து வரச்சென்ற போது மனைவியின் அத்தை சந்திரா என்பவர் தன்னை அரசு ஊழியர் என்று கூறி 10 பேருடன் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று மிரட்டினார்.

சம்பவ தினத்தன்று என்னுடைய இரு சக்கரவாகனத்தையும் சாவியையும் பறித்துச்சென்று விட்டனர்.

இதனால் ஏற்பட்ட அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை, அப்பாவி ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம் என எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, மனைவி தாமினி, மாமனார் கருணாநிதி , உட்பட 7 பேர் மீது அரியமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like