பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள ஆறு நிறுவனங்களின் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகமையுடைய ஒரு லட்சம் பேரை பணிக்கு அமர்த்தும் நோக்குடன் அமைக்கப்பட்ட பல்நோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களம்,
மிலோதா நிறுவனம் (Academy of Financial Studies),
இராசாயன ஆயுதங்கள் சமவாயத்தை செயற்படுத்தும் அதிகார சபை,
அப்பிவெனுவன் அப்பி நிதியம்,
தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம்,
இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்வியல் நிறுவனம் ஆகிய 6 நிறுவனங்களே பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த 6 நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.






