வயிற்றில் 3 மாத கருவுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்… திருமணமான 9 மாதத்தில் நிகழ்ந்த சோகம்

கணவர் வீட்டில் கொடுத்த வரதட்சணை கொடுமையினால் 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தீவைத்து தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த அரங்கமங்கலம் ஊராட்சி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் வினிதா (25). எம்.பி.ஏ. பட்டதாரியான சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு வினிதாவிற்கு பெற்றோர் செய்ய வேண்டிய சீர்வரிசை, நகை எல்லாவற்றையும் கொடுத்தனுப்பியுள்ளனர். பின்பு ராஜன் குடும்பத்தினர் கார் கேட்டதால் ஒன்றரை லட்சம் பணமும் கொடுத்துள்ளனர்.

தற்போது உரடங்கு என்பதால் வேலையில்லாமல் வீட்டிலிருந்த ராஜன் குடித்துவிட்டு வினிதாவிடம் சண்டையிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது புதிய பைக் வேண்டுமென்றும் தகராறு செய்துள்ளார்.

இதன் வினிதாவின் தந்தை அறுப்புக்காலம் முடிந்த பின்பு வாங்கித்தருவதாக மகளிடம் கூறிய நிலையில், இதற்கு சம்மதிக்காத கணவர் குடும்பத்தினர் வினிதாவிடம் பயங்கரமாக சண்டையிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனம் வெறுத்துப்போன வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தீ வைத்துள்ளார். பின்பு அவரது அலறல் சத்தத்தினை கேட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனினிற் வினிதா உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு தனக்கு நடந்த வரதட்சணை கொடுமையினை வாக்குமூலமாகவும் கூறியுள்ளார்.

இதனால் கணவர் குடும்பம் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.