பேருந்து சேவைகள் நாளை முதல் அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை இடம்பெறும்

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேருந்து சேவைகள் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று சுட்டிக்காட்டியுள்ளது அமைச்சு, பேருந்துகளின் கட்டணம் நிறுத்துமிடம் வரை மட்டுமே அறிவிப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மாகாணங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பில் இன்று காலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடைபெற்றது.

அரசின் அறிவுறுத்தலின் பேரில் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு (எஸ்.எல்.டி.பி) போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீரா அறிவுறுத்தியுள்ளார்.
5 வழித்தடங்களில் வரும் பேருந்துகள் கொழும்புக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

கண்டி வீதியில் பயணிக்கும் மத்திய மாகாண பேருந்துகள் நிட்டம்புவ வரை மட்டுமே சேவையில் ஈடுபட முடியும். கொழும்பு -05 வீதிகளில் செல்லும் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மினுவங்கொட மட்டுமே அனுமதிக்கப்படும். காலி வீதியில் சேவையில் ஈடுபடும் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் பனாந்துறை வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

கொழும்பிலிருந்து அவிசாவெலைக்கு அதிவேக மற்றும் கீழ்-நிலை வீதிகள் வழியாக பயணிக்கும் மத்திய மாகாண பேருந்துகள் அவிசாவெலவில் நிறுத்தப்பட வேண்டும்.

புத்தளத்தில் இருந்து அனுராதபுரவிற்கும், குலியாபிட்டியாவிலிருந்து நீர்கொழும்புக்கும் செல்லும் மாகாண பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்பட வேண்டும். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் கொட்டவாவே வரை மட்டுமே சேவையில் ஈடுபட முடியும்.

பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் பேருந்து சேவை இடம்பெறும் கடைசி இடம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு பயணியும் முகக் கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் பொது சுகாதார வசதிகளை பராமரிக்க வேண்டும்.

தனியார் பேருந்துகளுக்கான வழித்தட உரிம காலத்தை ஜூன் 30 வரை நீடிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (என்.டி.சி) முடிவு செய்துள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் ஒரே வழித்தடத்தில் மீள இயங்கும் என்று அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசு பிறப்பித்த உத்தரவுகளின்படி பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, பொதுமக்களிடம் கேட்டுள்ளார் – என்றுள்ளது.