இலங்கையில் மேலும் 5 கடற்படையினருக்கு கொரோனா….! மொத்த எண்ணிக்கை-1206

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1206ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1201 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 483 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.