யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் விபத்தில் மரணமானார்

சற்று முன்னர் யாழில் இடம்பெற்ற விபத்தில் மரணமான யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் சிவகாந்தன் அவர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான எஸ்.தனுஜனின் தந்தையான எஸ்.சிவானந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.