அறிகுறியே இல்லாமல் மீண்டும் சீனாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ்.. வெளியான தகவல்..!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துகொண்டே தான் இருக்கிறது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை எப்பொழுது மாறி பழைய நிலைக்கு திரும்புவோம் என தினக்கூலி மக்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் ஆனது, உலகமெங்கும் பரவியது. ஆனால் சீனா இரண்டு மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டு வந்தது.

தற்போது, மீண்டும் சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 22 பேர், உகான் நகரைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிகுறியுடன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரளாவிலும் திரும்ப புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.