120 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவனால் பரபரப்பு -மீட்கும் பணி தீவிரம்

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்ற பகுதியில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சாய் வர்தன் தனது வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

சாய் வர்தனின் அப்பா கோவர்தன் விவசாயி. இவரின் மொத்த குடும்பமும் விவசாய குடும்பம் ஆகும். இவர் தனது வீட்டின் பின் பக்கத்தில் விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறுகளை மூன்ற தோண்டி இருக்கிறார்.

அந்த இடத்தில்தான் சாய் வர்தன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

குறித்த ஆழ்துளை கிணறுகள் மூன்றிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் சாய் வர்தனின் அப்பா கோவர்தன் ஈடுபட்டு உள்ளார்.

ஒவ்வொரு கிணறுகளாக மூடப்பட்டு வந்தது. அப்போது சாய் வர்தன் அங்கு விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்துள்ளார். இரண்டாவது கிணற்றில் தவறி அந்த சிறுவன் விழுந்து இருக்கிறான்.

அந்த கிணறு 120 அடி ஆழம் கொண்டது. இன்று மாலை 4.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.இதையடுத்து உடனடியாக மீட்பு படையினருக்கு தந்தை தகவல் கொடுத்துள்ளார். அங்கு தீயணைப்பு படையினர் உடனடியாக வந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.