நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு ! வெளியான முக்கிய அறிவிப்பு

நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாளைமறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும்.

அத்தோடு தினமும் அதிகாலை 4 மணிக்கு தளர்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 10 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட சிறப்பு ஊடக அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நாடுமுழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

அத்துடன், ஜூன் 4ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஜூன் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடுமுழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like