ஆடைகளை அணிந்து பார்த்து கொள்வனவு செய்ய தடை – கடும் சிரமத்தில் பெண்கள்

ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை அணிந்து பார்த்து கொள்வனவு செய்வது சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடைகளை அணிந்து பார்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் ஆடைகளை திரும்ப பெறுவதிலும் கடும் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ள சுகாதார வழிக்காட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஆடைகளை அணிந்து பார்த்து கொள்வனவு செய்வதில் முக்கியத்துவத்தை கொடுப்பவர்கள் என்பதால், இந்த தீர்மானம் காரணமாக பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஆடை விற்பனை நிலையங்களிலும் ஒரு மீற்றர் இடைவெளியை பேண வேண்டும். அத்துடன் தாமாகவே துணிகளை கொள்வனவு செய்யும் முறை, தொடர்புகள் இன்றி பணம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர், வாடிக்கையாளர்கள் வரிசைகளில் நிற்பதையும் குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.