பாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா.. அதிகரித்துகொண்டே செல்லும் பாதிப்பு எண்ணிக்கை!

கொரோனா தொற்று உலகமெங்கும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 028 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 57 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,317 ஆக அதிகரித்துள்ளது.