சுகாதார பரிந்துரைகளுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தொண்டமானின் புதல்விக்கு அனுமதி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்கில் பங்கெடுக்க அவரது மூத்த புதல்வி கோதை நாச்சியாருக்கு சுகாதார அதிகாரிகள் சுகாதார பரிந்துரைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இறுதிச் சடங்கு நடைபெறும் போது அதற்கு அருகில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பார்வையிடுமாறு சுகாதார அதிகாரிகள பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியில் இருந்து வரும் மக்களிடம் இருந்து விலகி, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மருத்துவரான கோதை நாச்சியார் ஓமானில் தொழில் புரிந்து வந்ததுடன் தனது தந்தை இறந்த பின்னர் நாடு திரும்பினார்.

நாடு திரும்பிய அவர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற போதிலும் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார பரிந்துரைகளுடன் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.