இன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா?

கொரோனா பாதிப்பானது உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்.

மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,149 பேர்களில் சென்னையில் மட்டும் 804 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1798, தேனாம்பேட்டையில் 1662, தண்டையார்பேட்டையில் 1661, அண்ணா நகரில் 1237, அடையாறில் 834, வளசரவாக்கத்தில் 871 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் இருக்கும் சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார். இது சென்னை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேட்டியாக பார்க்கப்படுகிறது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like