45 ஆண்டுகளாக பிரியாமல் மகிழ்ச்சியாக இருந்த தம்பதி… பூனையால் விவாகரத்தில் முடிந்த சோகம்!

பூனைகள் மீது மிக அதிகமான அன்பை கொட்டியதால் 45 ஆண்டுகால திருமண வாழ்க்கையையே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் முறித்து கொண்ட சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் 1975ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் நீதிமன்றத்தில் விசித்திர வழக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனுவில், தாம் ஓய்வு பெற்ற ஆசிரியர். 2006ம் ஆண்டு வரை நாங்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம்.

ஆனால் என் மனைவி பூனைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். வீடு முழுவதும் பூனைகளாக இருப்பதுடன், ஆங்காங்கே மலம், சிறுநீர் கழித்துள்ளன. நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என் மீது சிறுநீர் கழித்ததால் நான் வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது ஓய்வூதியத்தினை வங்கியில் போட்டுவைத்ததை தனக்கே தெரியாமல், மனைவி எடுத்து செலவழித்ததுடன் எனது மகனுக்கும் கார் வாங்கிக்கொடுத்துள்ளார்.

2006ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த விசித்திர வழக்கினை விசாரித்த நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஆனால் மனைவியோ இந்த விவாகரத்தை ஏற்காமல் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன் என அடம்பிடிக்கிறாராம்.