யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த கடத்தலில் தந்தை சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like