ஒரே நாளில் கோடீஸ்வரரான பேக்கரி கடை ஊழியர்; வெளிநாட்டில் திக்குமுக்காடிப் போன தருணம்

அமீரகத்தில் பணிபுரிந்த இந்தியருக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது, இவரது மனைவி ஆஷிபா, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார், ஆன்லைனில் நண்பர்களுடன் சேர்ந்த லொட்டரி வாங்குவது அசைனின் வழக்கம்.

இதன்படி கடந்த மே 14- ந் திகதி தனியொரு ஆயாக 139411 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்கினார்.

இந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்து விட, ஒரே நாளில் அசைன் முகமது ரூ. 24.6 கோடிக்கு (12 மில்லியன் திர்ஹாம், ஒரு திர்ஹாம் இந்திய மதிப்பில் 20 ரூபாய் ஆகும் ) அதிபதியாகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பரிசு விழுந்தது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து போன் வந்தது.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, நண்பர்கள் என்னிடம் விளையாடலாம் என நினைத்து போனை துண்டித்துவிட்டேன்.

பின்னர் ஆன்லைனில் பார்த்தபோது தான் என் நம்பருக்கு பரிசு விழுந்திருந்தது தெரியவந்தது, சந்தோஷத்தில் ஒன்றும் விளங்கவில்லை.

இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.