சுவாமி சிதாகாசனந்தாவின் சர்ச்சைக்குரிய மறுபக்கம்

உலகளாவிய ரீதியில் ஆன்மீக நெறியை வழங்கிவரும் சர்வதேச ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் சுவாமி சின்மயானந்தர் அவர்களினால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஆச்சிரமங்களை அமைத்து தமது ஆன்மீகப்பணியை சிறப்புற நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் எண்பதுகளில் இலங்கையிலும் சின்மயாமிஷன் என உருவாக்கப்பட்ட இவ் அமைப்பானது இலங்கை ஜனநாயகக்குடியரசு சட்டங்களுக்கு அமைவாக பதிவுசெய்யப்பட்ட ஒர் ஆன்மீக நிறுவனமாகும். இது கொழும்பு,ரம்பொடை, கண்டி , திருகோணமலை, கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் என ஆச்சிரமங்களை அமைத்து தனது சேவையை சிறப்புற ஆற்றிவருகின்றமை இந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நன்மதிப்பையும் உருவாக்கியிருந்தது.

இந் நிலையில் யாழ்ப்பாணம் சின்மயாமிஷனுக்கு காசிநாதர் விஸ்வநாதர் குருநாதன் அவர்களுக்கு சொந்தமான நல்லூர் கந்தன் ஆலய முன்பகுதியில் அமைந்துள்ள காணியை 2016 ஆண்டு மனம் விரும்பி அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

யாழ் வதிவிட ஆச்சாரியாராக இருந்த சுவாமி சிதாகாசானந்தா தலமையில் அவரது அழைப்பை ஏற்று சின்மயா மிஷனின் தற்போதைய பெரிய சுவாமி சொரூபானந்தா அவர்கள் நேரடியாக வருகை மரக்கன்று ஒன்றை நாட்டி ஆச்சிரம் அமைப்பதற்காக கருத்துக்களையும் ஆசிகளையும் காணியை வழங்கிய கொடையாளருக்கும் பக்தர்களுக்கும் வழங்கிவைத்தார்கள். அவரது கருத்துக்களுக்கு ஏற்ப சிறந்தமுறையில் ஆச்சிரமம் அமைப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுவந்தநிலையில் தற்காலிக ஆச்சிரமும் நிறுவப்பட்டு இருந்த நிலையில்,

வதிவிட ஆச்சிரியராக பணிபுரிந்துவந்த சுவாமி சிதாகாசனந்தா அவர்கள் அதனை அபகரிப்பதற்கான செயலில் இறங்கியுள்ளமை யாழ் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆச்சிரமம் அகற்றப்பட்டுள்ள தற்போதைய தோற்றமும் உலகளாவிய தலைவருடன் ஆனந்தமாக இருக்கும் காணிக்கொடைளாரும்.
சிதகாசானந்தா அவர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் அதற்கு சான்று பகிரவதாகவும் உள்ளதுடன் இந்துமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மே மாதமளவில் சுதந்திரமாகவும் சுயாதினமாகவும் இயங்குவதாக தெரிவித்து சின்மயாமிஷலிருந்து தீடிரென வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் சின்மயா மிஷன் வளவில் இருந்த ஆச்சிரமத்தையும் அதன் பெயர்ப்பலகையும் சட்டவிரோதமாக கழட்டி காணிக்குள் உள்நுழைய முடியாதவாறு ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.

இந்த சட்டத்துக்கு முரணான செயற்பாட்டை சிதகாசானந்தாவும் அவருடன் கூடிய சிலரும் செய்து விட்டு பழிமுழுவதையும் காணியை நன்கொடையாக வழங்கிய வயதான முன்னால் உரிமையாளர்களின் பெயரில் போடுவதாகவும் ஆச்சிரமத்தின் அயலவர்களால் அறிய முடிந்தது

காணியை வழங்கிய திரு குருநாதன் அவர்களை கொழும்பில் இருந்து சந்திக்க வருகைதந்த சுவாமிகள் மற்றும் நிர்வாகத்தினர் உள்நுழைவை தடுப்பதற்கான நீதிமன்றின் கட்டளை பத்திரத்திரம் ஒன்றினை ஒட்டவைத்துத்துள்ளார்.

நீண்டகாலமாக மிஷனுக்கு வரும் பக்தர்களுக்கும் காணி நன்கொடையாளருக்கும் சிதாகாசனந்தா அவர்கள் தன்னை மிஷன் நீக்கிவிட்டதாக பல்வேறு புனைவுக்கதைகளை சொல்லி மேற்படி காணியை அபகரிக்கும் கீழ்த்தரமான செயல்களின் இறங்கியுள்ளதுடன் அவர்பின் நின்ற அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் சில ஆதினங்களும் சில சமய நிறுவனங்களும், சாமியார்களும் மண், பெண், பொன் என்று பேராசை பிடித்து அடிபட்டுக்கொள்வதை போன்றநிலை தற்போது பலரால் பல்வேறு வகையில் சுரண்டப்படும் யாழ்மண்ணிலும் தோன்றியிருப்பதாக மக்கள் கவலையையும் கண்டனங்களையும் வெளியிட்டுவருகின்றார்கள்.

அதுமட்டுமல்லாது மிஷனின் நன்மதிப்பை சீர்குலைக்கும் பல செயல்களை செய்துவருகின்றார். உதாரணமாக அரசியல் பிரவேசம், உத்தியோகபூர்வ முகபுத்தகத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளமை எதிர்காலத்தில் மிஷனின் செயற்பாடுகளை முடக்குவதற்கான அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பல தசாப்தகாலமாக ஆன்மீகப்பணியில் சிறப்பாக விளங்கும் ஒருநிறுவனத்தின் மீது சேறு புசியதுமட்டுமல்லாமல் அதனது கருத்துகள் பக்தர்களுக்கு சென்றடையாமல் தடுத்துவந்துள்ளதுடன் இதுவரை மிஷனில் பங்களிப்பு செய்தவர்களையும் விலகுமாறு மூளைச்சலவை செய்யும் செயல் ஒரு துறவி செய்யக்கூடி செயல் அல்ல. இத்தகையவர்களால் துறவுவாழ்க்கையில் புனிதமாக இருக்கும் ஏனைய சுவாமிகளுக்கு களங்கம் கற்பிக்கபட்டுவருகின்றது என பல யாழ் வாசிகள் முணுமுணுக்கிறார்கள்

தற்போது தனிப்பட்ட நபராக உள்ள சிதகாசானந்தா காணியை வழங்குவதற்கு ஆதரவற்ற முதியோர்களான திரு குருநாதன் தம்பதிகளை உணர்வு ரீதியான அச்சுறுத்தலையும் மூளைச்சலவையையும் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே சின்மயா மிஷனுக்கு காணிக்கொடையாளர்கள்; சுயாதீனமாக விரும்பி வழங்கிய காணியில் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஆச்சிரத்தை அமைப்பதோடு அதற்கு தடையாக இருக்கும் சிதகாசனந்தா மீது அழுத்தங்களை கொடுக்குமாறு ஊடகங்களை நாடியுள்ளனர்.

தனிநபருக்கு காணியை வழங்குவதை தவிர்த்து அதை வினைத்திறனாக உபயோகிக்ககூடிய சின்மயா மிஷன் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமய சமூக பணிகள் செய்யும் சிவபூமி போன்ற நிறுவனங்களுக்கு வழங்குவது அனைத்து மக்களுக்கும் நாம் செய்யும் பெரு நன்மையாகும்.

மேற்படி சர்ச்சைக்குரிய சுவாமியின் பிரத்தியேக செயற்பாடுகள் தொடர்பாக அவர்சார்ந்த நெருங்கிய பக்தர்களின் முகம்சுளிக்கவைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் நமக்கு ஆதாரத்துடன் பல தகவல்கள் கிடைத்திருப்பினும் கலாச்சார பண்பாடுகளை கருத்திற்கொண்டு அவற்றை இங்கு பிரசுரிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை வளமாக்கிவைத்த குருவுக்கு பெரும் குருநிந்தனையையும் இழைத்துள்ளமை இந்து தர்மத்தை மீறும் கொடுஞ்செயலாகும்

இலங்கை வாழ் இந்து மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்ட நிகழ்வு அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.


பொறுப்பு துறப்பு :
இந்த செய்தி ஒரு பொது எழுத்தாளர் ஒருவரால் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது. இந்த செய்தியின் எந்தவொரு ஆக்கத்திலும் , தயாரிப்பிலும் யாழ்தீபம் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.