இரகசிய தகவலால் யாழின் முக்கிய பகுதிகள் அதிகாலையில் இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு

கோண்டாவில் காரைக்கால் பகுதி இன்று அதிகாலை தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது….

கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இன்று அதிகாலை தொடக்கம் இராணுவம் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு வீடாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை அண்மைய நாட்களாக அப்பகுதியில் வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழையில் திடீர் சோதனை! ஆவா குழுவின் வாள்கள் மீட்பு

யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையின்போது அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இராணுவப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.