கோஹ்லிக்கு புதிய சிக்கல்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டது, விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

கோஹ்லி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை கடந்த 11 ஆம் திகதி கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் இத்தாலியில் இந்து முறைப்படி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 21 ஆம் திகதி மற்றும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. பன்னாலால், விராட் கோஹ்லி, தேசபக்தர் கிடையாது, என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில்;

கோஹ்லி இந்தியாவில் பணம் சம்பாதிக்கிறார், மிகவும் பிரபலமானவரான இவர் தனது திருமணத்திற்கு மட்டும் ஏன் இத்தாலிக்கு சென்றார், இந்து கடவுள் ராம் மற்றும் கிருஷ்ணா இந்த மண்ணில்தான் திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், கோஹ்லி மட்டும் திருமணம் செய்துக்கொள்ள இத்தாலிக்கு சென்றுள்ளார். அவர் ஒரு தேசபக்தரே கிடையாது என்று விமர்சித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like