பாடசாலை நேரத்தையும் மாற்றியமைத்தது கல்வி அமைச்சு

பாடசாலைகளை ஜூன் 29ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

3 மற்றும் 4 தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரை

5ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரை

6, 7, 8 மற்றும் 9ஆம் தரங்களுக்கு
காலை 07:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:30 மணிவரை

10, 11, 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு
காலை 7:30 முதல் மாலை 3:30 மணி வரை

1 மற்றிம் 2ஆம் தரங்களை மீள ஆரம்பிம்பது தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.