அரச, தனியார் ஊழியர்களின் தொழில் நேரங்களில் மாற்றம்!

அரச மற்றும் தனியார் துறையினர் தொழிலுக்கு திரும்பும் நேரத்தை மாற்றுவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்சவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்ததீர்மானம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொழும்பு உட்பட அதிக நெரிசல் கொண்ட நகரங்களில் இந்த தீர்மானங்களை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மிக விரைவில் இந்த நேர மாற்றம் குறித்த அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது