சுமந்திரன் சொன்னதில் என்ன பிழை? தமிழ் தலைவர்கள் ஏன் அவரை திட்டித்தீர்க்கின்றார்கள்?

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் வழங்கியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவரை கடும் கண்டனத்துக்குள்ளாக்கி இருந்ததுடன் அரசியல் அரங்கில் கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கூட அவர் கலந்துகொள்ளாத அளவிற்கு அச் செவ்வி அவருக்கு நெருக்கடியை கொடுத்திருந்தது.

தமிழ்ப்பரப்பில் செயலாற்றும் அரசியல்வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள் அவர் மீது கடுமையான எதிர்வினையாற்றும் அளவுக்கு இது இட்டுச் சென்றுள்ளது.

செல்வம் அடைக்கலநாதன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சுரேஷ் பிரேமச்சந்திரன் , அரியநேத்திரன் மற்றும் சிறிநேசன் உள்ளிட்ட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனந்தி சசிதரன் , சித்தார்த்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சுமந்திரனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சுமந்திரன் சொன்னதில் என்ன பிழை? தமிழ் தலைவர்கள் ஏன் அவரை திட்டித்தீர்க்கின்றார்கள்?

இப்படியான கேள்விகள் இன்று பலரிடமும் இருக்கின்றன.

சுமந்திரன் விட்ட தவறை விளக்குகின்றார் தமிழரசுக் கட்சியின் ஒரு மூத்த தலைவர்: