பொது மக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் குறைகேள் அதிகாரி ஒருவர் நியமனம்!

ஜனாதிபதி செயலகத்தில் பொது மக்கள் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் தீர்வினை முன்வைப்பதற்கும் குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க, குறைகேள் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகக் கடமைகளில் இழைக்கப்படுகின்ற தவறுகளை விசாரணை செய்வதற்கும் தீர்வு காண்பதற்கும் ஒம்புட்ஸ்மன் என அழைக்கப்படும் குறைகேள் அதிகாரி நியமிக்கப்படுகின்றார்.

இதனூடாக பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை தனிப்பட்ட முறையில் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி அலுவலகத்தின் குறைகேள் அதிகாரி , ஜனாதிபதி அலுவலகம் கொழும்பு 1 எனும் முகவரிக்கு தபால் மூலம் பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை அனுப்பிவைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 0112 338 073 எனும் தொலை நகல் இலக்கத்தின் ஊடாகவோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.