கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காலேகுண்டா பகுதியில் ஈரோடு மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று வெற்றிவேல் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அருகிலுள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.
குளத்திலிருந்து ஒரு மீனைப் பிடித்து கரைக்கு கொண்ட வந்த போது, அதனை உயிருடன் விழுங்கப் போவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
டிக்டாக்கில் வீடியோ எடுக்குமாறு நண்பர்களிடம் கூறிவிட்டு வெற்றிவேல் அந்த மீனை உயி ருடன் விழுங்கினார். மீன் உயிருடன் இருந்ததால் வெற்றிவேலின் சுவாசக்குழாயில் முழுவதுமாக சிக்கிக் கொண்டுள்ளது.
மூச்சு விட சிரமப்பட்ட வெற்றிவேல் சில நொடிகளிலேயே மயங்கி விழுந்ததால், நண்பர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று, பரிசோதித்த போது அங்கு மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.