ராமர் பாலம் – புதைந்துள்ள மர்மம்

ராமர் பாலம் என்ற ஒன்று 7000 வருடங்களுக்கு முன் மனிதர்களாலேயே கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன,ஆனால் இதில் இன்னொரு செய்தி புதைந்துள்ளது அது என்னவென்றால் ஈழத்தை ஆண்ட இராவண மன்னன் சீதையை கடத்தி இலங்கை கொண்டு வந்தபடியால் அவளை மீட்கவே வட இந்திய மன்னன் ராமன் மனிதர்கள் கொண்டு பாலம் அமைத்து இலங்கை வந்தடைந்தான் எனில் இராவணன் எவ்வாறு இந்தியாவிலிருந்து சீதையை கடத்தி இங்கு கொண்டுவந்திருக்க முடியும்? விமானம் மூலமே இது சாத்தியம்!!!

ஏனெனில் இராமாயணத்தில் கூறப்ப்பட்டது போல “புட்பக விமானத்தை” இராவணன் பயன்படுத்தியிருக்கிறார். ஆக 7000 வருடங்களுக்கு முன் தமிழன் இந்தியாவிலோ அல்லது உலகத்திலோ விமானம் என்பது பயன்பாட்டில் இல்லாத காலத்தில் ஈழத்தில் பயன்படுத்தியிருக்கிறான். இது தான் உண்மை. இராவண மன்னன் விமானத்தை பயன்படுத்தியிருப்பதற்கான எனது சான்றுகள்.

1.கண்ணிமைக்கும் நேரத்தில் சீதையை கடத்த முடிந்தமை. ஆகவே அது விரைவான ஒரு ஓடத்தால் மாத்திரமே முடியும்.

2.ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கண்டி இராசதானியை அவர்களால் கைபற்ற முடியாதிருந்தது. ஏனெனில் அதன் இயற்கையமைப்பு, பின் அங்குள்ளவர்களின் துரோகத்தனத்தை கொண்டு கண்டியை கைபற்றியது வரலாறு.அப்போதைய காலத்திலேயே( கண்டிய இராசதானி) நுவரெலியாவுக்குரிய தரை வழி பாதைகள் சிறப்பாக இருக்கவில்லை, பின்னர் ஆங்கிலேயர்களால் தான் பாலங்கள் அமைத்து நுவரெலியாவுக்கான
பாதைகள் அமைக்கப்பட்டன, இது இப்படியிருக்க எப்படி 7000 வருடங்களுக்கு முன் கடத்திய சீதையை நுவரெலியாவிலுள்ள “சீதா எலிய” எனும் இடத்தில் சிறை வைத்திருக்க இராவணனால் முடிந்திருக்கும்?. விமானத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

3.அடுத்து உலகில் அல்லது இந்திய துணைக்கண்டத்தில் விமானம் பயன்பாட்டில் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டு ராமர் சீதையை மீட்பதற்காக வட இந்தியாவில் இருந்து இராமேஷ்வரம் வந்து பின் பாலம் அமைத்தே இலங்கை வந்தடைந்துள்ளான்.

எனவே விமானப் பயன்பாடு அக்காலத்தில் அவர்களிடமில்லை. தனியே விமானப் பயன்பாடு தமிழன் ஒருவனிடமே இருந்துள்ளது. அதுவும் ஈழத்தில்( இந்திய தமிழனிடம் பயன்பாட்டில் இருந்திருந்தால் இராமன் அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் ஆனால் இராமனால் பாலம் கட்டியே இலங்கை வர முடிந்தது)

4.அதைவிட ஒரு பொருள் புதிதாக கண்டு பிடித்து உலகுக்கு அறிமுகம் செய்த பின்னரே அக்கருவியின்/ பொருளின் பெயர் (Patent) அகராதியில் இடம் பெறும். விமானத்தை கண்டு பிடித்த பின்னரே அச்சொல் உலகுக்கு அறிமுகமாகியிருக்கும், ஆக விமான கண்டுபிடிப்பு “ரைட் சகோதரர்களால்” 19 ம் நூற்றாண்டு வாக்கிலேயே கண்டுபிடிக்கப்பட்டு உலக்குக்கு விமானம் என்ற சொல் அறிமுகமாக, எப்படி 7000 வருடங்களுக்கு முந்தய இராமாயாண இதிகாசத்தில் ” புட்பக விமானம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆக விமானம் என்ற சொல் 7000 வருடங்களுக்கு முன் பழமையானது, எனவே அதை பயன்படுத்தியது தமிழ் சைவ ஈழ மன்னன் இராவணனே என உறுதியாகிறது.

இவ்வாறாக தொழில் நுட்பத்திலும், அறிவிலும், போர்கலையிலும், கலாச்சாரத்திலும், சைவத்திலும் என உலகில் தழைத்தோங்கியிருந்து உலகை ஆண்டிருந்தது தமிழ் குடியே!! என்பதில் வியப்பில்லை. எனினும் வரலாற்று இருட்டடிப்புக்கள் மூலமும் , இதிகாச இருட்டடிப்புக்கள் மூலமும், ஆராய்ச்சி இருட்டடிப்புக்க்கள் மூலமும் எம் பண்டைய தொன்மையை தொலைத்து அதை தேடத்தானும் முலாது போய்விடுகிறோம்.

எனினும் பல ஆய்வுகளின் படி மேலைத்தேயம் உலகை ஆண்டது தமிழ்குடி தான் எனவும் அவர்கள் வியக்கும் தொழில்நுட்பங்களினை கைவசம் வைத்திருந்தது என்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டு அதை உலக்குக்கு தெரியப்படுத்தாது இருட்டடிப்பு செய்வதே வழமை, ஏனெனில் தமிழனின் பலம் வரலாறு ,தொன்மை என்பன எங்களினை விட அவர்களுக்கு அதிகம் ஆய்வுகள் மூலம் தெரிந்தபடியாலேயே அவர்கள் இப்போதும் எமகென்றொரு தேசம் கிடத்துவிடக்கூடாதென்ற முடிவில் இறுகப்பற்றியிருக்கிறார்கள்.

இருந்தபோதும் அமெரிக்க ஆய்வாளர்கள் ராமர் பாலத்தின் தொன்மை, உண்மை என்பவற்றை உண்மையாக வெளிப்படுத்தியதற்க்கு நன்றி கூருகிறோம்.

நன்றி
கு.மதுசுதன் B.Sc(Hons) , M.Sc