கொழும்பில் சுனில் ஜயவர்தன கொலையால் மகிழ்ச்சியில் பதிவிட்ட மஹிந்த கஹந்தகமவின் மகள்

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டமை கேள்விப்பட்டதை அடுத்து தமது வீட்டு உறுப்பினர்கள் சந்தோசம் அடைந்ததாக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவின் மகள் ரேகா கஹந்தகம கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி போல உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.