பொலிஸ் நிலையத்திற்குள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

சிலாபம் – மாதம்பே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.