கருணாவை தவிர்த்து மகிந்தவைச் சந்தித்த மனைவி மற்றும் மகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவியும் மகளும் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

வழமையாக கருணாவுடன் இணைந்து சந்திப்புக்களை நடாத்தி வந்த கருணா மனைவி இம்முறை தனியாக சென்று மகந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஏன் கருணா செல்ல வில்லை என்கின்ற வினா பரவலாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.