வங்கி வந்த பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தி சாவியை எடுக்க மறந்து ஓடி கண்ணாடி கதவின் மேல் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவில் எர்ணாகுளத்தின் பெரம்பவூரில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார் பெண் ஒருவரான பீனா (46). இவர் தனது இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு வங்கிக்குள் வந்துள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுக்கவில்லை என அவருக்கு நினைவு வந்துள்ளது. யாரேனும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் வேகமாக ஓடிய பீனா வாசலில் இருந்த கண்ணாடி கதவைக் கவனிக்காமல், வேகமாக கண்ணாடி கதவில் மோதி நிலைகுலைந்து விழுந்துள்ளார்.
விழுந்து பின் உடைந்த கண்ணாடி ஒன்று அவரது அடிவயிற்றை குத்திக் கிழித்துள்ளது. உடனடியாக வங்கியில் இருந்தவர்கள் பீனாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அதிக ரத்தம் வெளியானதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உயிரிழந்த பீனா தனது கணவருடன் எலக்ட்ரிகல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது குறித்து பெரம்பவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Shocking! Woman in #Kerala's #Ernakulam Dies After Colliding Into Bank's Glass Door, CCTV Video Shows Accident pic.twitter.com/m4AUJLWRpq
— Nikhil Sasikumar (@Nilze_Madathil) June 16, 2020