இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரணகம்! யாழ் மற்றும் கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாளைய தினம் ஏற்படவுள்ள இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரணகத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு சூரிய கிரகணம் தென்படும் நேரத்தை குறிப்பிட்டுள்ளதுடன், கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.நெடுந்தீவை அண்மித்த பிரதேசங்களில் காலை 10.30 மணியளவில் சூரிய கிரணகம் தென்படும்.

ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறையிலும் இந்த சூரிய கிரணகம் தென்படும்.

கொழும்பில் காலை 10.29இற்கு சூரிய கிரணகம் தென்படும் என்பதுடன் மு.ப. 11.51 மணியளவில் சூரிய கிரணம் முழுமையடைந்து 1.50 மணிக்கு முடிவடையும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும்.

கொழும்பிலிருந்து சூரியனை பார்க்கும் போது சூரியன் சந்திரனால் 16.5 வீதம் மறைக்கப்படுவதைக் காணலாம்.

மேலும் இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாம் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.