நயினாதீவு நாகபூசணி அம்பாளுக்கு வந்த சோதனை

கடவுளை வணங்கும் அடியார்கள் ஆலய எல்லைக்கு அப்பால். ஆலயத்தின் எல்லைக்குள் நிர்வாகம், ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள்..

ஆனால் வழங்கப்பட்ட தகவல் சுகாதார முறைப்படி ஆலய வளாகத்துக்குள் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இதை நம்பி இன்று வருகைதந்த பக்தர்களின் நிலை பரிதாபம்

இது தொடர்பில் முகநுால் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ள நெடுந்தீவு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் குணாளன் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது….

நயினாதீவில் அம்மன் அடியார்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகின்றனர். இந்த ஆட்சியில் இது நான் எதிர்பார்த்த விடயமே.

வடக்கில் கொரோனா ஆபத்து என்பது துளியுமில்லை . ஆனால் கொரோனா ஆபத்து நிலவுகின்ற தென்னிலங்கையிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் , பக்தர்கள் சுதந்திரமாக நயினாதீவுக்கு வந்து விகாரையில் வழிபட்டுச்சென்றிருந்தனர் .

இந்த ஆட்சியில் பங்காளர்களாக இருக்கின்ற டக்ளசு , அங்கஜன் போன்றவர்கள் நினைத்திருந்தால் இப்பிரச்சினையை முன்கூட்டியே எளிதாக தீர்த்திருக்கமுடியும் . இனி நாடகம் போட்டு வேலையில்லை நயினாதீவு மக்களே இனியுமா நீங்கள் ?

குறிப்பு – 2017 ல் நடைபெற்றிருந்த வேலணை பிரதேச சபை தேர்தலில் நயினாதீவிலுள்ள இரண்டு தேர்தல் வட்டாரங்களிலும் ஈபிடிபியே வெற்றிபெற்றிருந்தது . சபை தவிசாளரும் நயினாதீவினை சேர்ந்தவரே . 1998 – 2002 வரையும் அந்த நபரே தவிசாளராக செயற்பட்டார் .