மதுரையில் திருமணம் நிச்சயமான நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூரை சேர்ந்தவர் சீனிவாசன், இவர்களது மகள் சினேகா.
மதுரையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார், இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு நிச்சயித்துள்ளனர்.
இன்னும் நான்கு நாட்களில் திருமணம் நடக்கவுள்ள நிலையில், சினேகா அவர்களது தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அங்குள்ள மரத்தில் துப்பட்டாவில் பிணமாக தொங்கியபடி கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அலறித்துடினர்.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரணையை தொடங்கினர்.
திருமணத்தில் சம்மதம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.