பிரித்தானியா – போர்பரி பூங்காவில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – மூவர் பலி

பிரித்தானியாவில் போர்பரி கார்டன் பூங்காவில் நேற்று இரவு இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் இறந்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் லிபிய நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

எனினும் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கையை காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தாக்குதலுக்கு பயங்கரவவாதம் சாத்தியமான ஒரு உந்துதலாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.