காதலித்த திருநங்கையுடன் சேர்ந்து வாழ்ந்த இளைஞர்… வெகுநேரமாக திறக்காமல் இருந்த கதவு! பின்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

திருநங்கையை காதலிப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், திருநங்கை காதலியுடன் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாற்றை சேர்ந்த திலீப் (26) என்ற இளைஞர் உஜாலா கம்பெனி ஒன்றில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திலீப்பும், காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்த சிவானி என்கிற திருநங்கையும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு திலீப்பின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு வந்துள்ளதால், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் காரைக்கால் அடுத்துள்ள ஒடுதுறை என்ற பகுதியில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தியுள்ளனர்.

மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களின் வாழ்க்கையில் பிரச்சினை எழ ஆரம்பித்துள்ளது. ஆம் திலீப்பின் பெற்றோர்கள் மீண்டும் பிரச்சினை செய்ததால், இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டள்ளது. இதில் சிவானி இருவரும் பிரிந்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு மீண்டும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த நாள் வெகுநேரமாகியும் வீட்டு கதவு திறக்காமல் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்க்கையில், திலீப்பும் சிவானியும் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.