விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால மாணவர் அமைப்புப் பொறுப்பாளராகவும், கோப்பாய் பிரதேசப் பொறுப்பாளராகவும் இருந்த மேஜர் முரளி மற்றும் வீரவேங்கை தம்பி ஆகியோரின் தாயார் ஆவரங்காலில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.
மேஜர் முரளி (வேலுப்பிள்ளை ரட்ணசிங்கம்) .1983 இல் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்டன் பாலசிங்கத்தோடு லண்டனிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்.
இவர் தமிழீழ மாணவர் பேரவை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றிவர். பாடசாலைகளுக்கு ஒவ்வொன்றாகச் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, இன்று சர்வதேச அளவில் தமிழீழ மாணவர் அமைப்பு நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளத்தை இட்டு நிமிர்ந்து நின்றார் முரளி.
இவரது பணிகள் குறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திலீபன் உண்ணா நோன்பிருந்தபோது 12 நாட்களும் அருகிலிருந்து அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டிருந்தவர்.
23.12.1987 அன்று யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற மோதலில் இவர் வீரச்சாவடைந்தார்.