யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் பீல்ட்பைக் மோட்டார் சைக்கிள்களில் வந்த படையினர் கைத்துப்பாக்கிகளைக் காட்டி தங்களை மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றிரவு தாம் நாகர்கோவில் பகுதியில் நின்றிருந்தபோது அங்கு வந்த படையினர் தங்களைக் கைகளை மேலே தூக்குமாறு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தம்மைப்போல் வேறு சிலரும் படையினரால் அச்சுறுத்தப்பட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.