புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பு

விடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மாவீரர்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன் செயலி ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்கள், காணொளிகள் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், குரல் பதிவுகளும் இந்த செயலியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலிகளை நீக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.