யாழ்.மாவட்டத்தில் 5000 ரூபாவை முறைகேடாக வழங்கிய கிராமசேவகர்கள் மீது விசாரணைக்கு உத்தரவு

கொரோனா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை களவாடிய பல கிராமசேவகர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் மேற்கொண்ட 5 ஆயிரம் ரூபா விநியோகத்தில் தகுதி அற்றவர்களிற்கும், கிராமத்தில் வசிக்காதவர்களிற்கும் விநியோகித்தமை தொடர்பில் இதுவரை 4 கிராமங்களில் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உந்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் சாவகச்சேரி , சங்காணை , நல்லூர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் கிராம சேவகர்கள் தற்காலிகமாக பிரதேச செயலகங்களிற்கு இணைப்புச் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றது.

இதன்போது கிராம சேவகர்கள் முறைகேடாக வழங்கியவர்களிடம் நிதியை மீள வழங்குமாறு கோருவதோடு மீண்டும் மாற்று ஆவணங்கள் தயாரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை குறித்த மூன்று பிரதேச செயலாளர் பிரிவிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதில் சாவகச்சேரி தொடர்பிலேயே அதிக முறைப்பாடு கிடைத்ததாகவும் இவை தொடர்பான விசாரணைகள் முடிந்த பின்னரே முழுமையான விபரம் தெரிவிக்க முடியும் எனவும் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளாகவும் கூறப்படுகின்றது.