இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறு மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2020.04 27ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேற்றில் மீள் திருத்தம் செய்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரிகள் ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பரீட்சை திணைக்களத்துக்கு பதிவுத்தபாலில் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரிகளுக்கான மீள் திருத்த விண்ணப்ப பத்திரத்தின் மாதிரி விண்ணப்பப்படிவம் ஒன்று கடந்த 26ஆம் திகதி தேசிய பத்திரிகைகள் மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

இதுதொடர்பாக மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளையின் 0112 785231, 0112 785216, 0112 784037 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like