கொழும்பில் வீதிகளில் மிதக்கும் மனித உடற்பாகங்கள்! பெரும் அதிர்ச்சியில் மக்கள்

கொழும்பு பொரளை மயானத்திலிருந்து சடலங்களின் உடற்பாகங்களில் வெளிவருவதாக அந்தப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அந்தப் பகுதியை சேர்ந்த நாய்கள் மனித எச்சங்களை காவிக் கொண்டு திரிவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொரளை பிரதேச வீடுகளுக்கு அருகில் நாய்கள் மனித எச்சங்களுடன் மல்லுக்கட்டியமையை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் மனித கை ஒன்றுக்காக அந்தப் பகுதி நாய்கள் சண்டையிட்டுள்ளன. இதனையடுத்து அந்த மனித கையை புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று குழந்தையின் தலை ஒன்றை நாய் கவ்விக் கொண்டு வந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் இவ்வாறு மனிதர்களின் சடலங்களின் பகுதிகளை நாய்கள் கவ்விக் கொண்டு வந்து வீடுகளுக்கு அருகில் விட்டு செல்வதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நாம் பிறந்த நாள் முதல் அவ்விடத்திலேயே வாழ்ந்த போதிலும் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவம் இடம்பெறுவதாக அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு சடலங்கள் வெளிவர காரணம் என்ன என ஆராய்வதற்காக இரவில் இரகசியமாக நோட்டமிடுவதற்கு மக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய இரவில் நவீன ரக மோட்டார் வாகனம் ஒன்று மிகவும் வேகமாக அவ்விடத்திற்கு வந்துள்ளது. அந்த மோட்டார் வானத்தை ஓட்டி வந்தவர் வாகனங்களில் இருந்து பைகள் சிலவற்றை வெளியே எடுத்துள்ளார். பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணித்துவிட்டு மயானத்தில் உள்ள குழி ஒன்றிற்குள் போட்டு தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அங்கு என்ன நடந்ததென ஆராய்வதற்காக மக்கள் அருகில் சென்று பார்த்த போது, அரைவாசி மண் போட்டு மூட்பட்ட சடலங்களின் பகுதிகளே காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஆராய்ந்த போது, அவை மலர் சாலைகளில் சடலங்களை சுத்தப்படுத்தி நீக்கப்பட்ட பகுதிகளாகும்.

இதே போன்று மற்றுமொரு நாள் இரவு சோதனையிட்ட போது, வேன் ஒன்றில் வந்த குழுவினர் 10 சடலங்களுடன் சவப்பெட்டிகளை வெளியே எடுத்துள்ளனர்.

ஏற்கனவே அவ்விடங்களில் புதைக்கப்பட்ட சடலங்களுக்கு மேல் இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

அந்த சடலங்கள் வைத்தியசாலை பிணவறைகளில் உள்ளவைகளாகும். அவற்றினை பொறுப்பேற்க எவரும் முன்வராமையினால் இவ்வாறு இரகசியமாக புதைக்கப்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலங்கள் முறையாக புதைக்கப்படாமையினால் நாய்களும் காகங்களும் அதனை எடுத்து வந்து வீடுகளுக்கு அருகில் விட்டுச் செல்வதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் பொலிஸார் அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like