விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சி- சிறுவன் உட்பட 22 பேர் கைது

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் எனத் தெரிவித்து கிளிநொச்சியில் கடந்த மாதம் சிறுவன் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டின் கீழ்கடந்தவாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மாதம் முழுவதுமாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவர் 17 வயதுச் சிறுவன் என பெற்றோரால் பிறப்புச்சான்றிதழ் ஆதாரத்துடன் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like