மகிந்தவுக்கு மாம்பழங்களை வழங்கினார் உதயன் ஆசிரியர் பிரபாகரன்

உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தின் தலைமை ஆசிரியர் பிரதமருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழம் கொண்டு சென்று கொடுத்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை தமிழ் ஊடக ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்புக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரிய பீடத்தின் தலைமை ஆசிரியரான பிரபா என அழைக்கப்படும், த.பிரபாகரன் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழங்கள் கொண்டு சென்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அவர் கொடுந்திருந்தார்.

மாம்பழம் கொடுக்கும் ஒளிப்படங்களை பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள நிலையில் அதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள்.

அதேவேளை உதயன் பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன் தனது மகளின் பிறந்தநாளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை அழைத்து கேக் வெட்டியமை தொடர்பில் இன்றும் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , உதயன் பத்திரிகை தலைமை ஆசிரியர் பிரதமருக்கு மாம்பழம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.