அதிகரிக்கும் உயிர் பலிகள்… முன்பே கணித்த தமிழ் பஞ்சாங்கம்: அடுத்து இது தான் என எச்சரிக்கை

மியான்மரில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த நிலையில், சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியில் கச்சின் மாநிலத்தில் பாகந்த் என்ற இடத்தில் விலையுயர்ந்த பச்சை மரகதக் கல் எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, திடீரென்று வேகமாக மணல் காற்று வீசியது. அதுமட்டுமின்றி பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மணலால் மூடி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் சுரங்க விபத்து குறித்து, ஏற்கனவே சார்வரி வருடத்திய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் என்பது நிலத்தின் காரகன். தற்போது செவ்வாய் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள செவ்வாய் பகவானை மகரம் ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் சனி பார்வையிடுகிறார்.

செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் இரண்டு கிரகங்களும் ஒன்றாக சஞ்சரித்தாலோ, பார்வை விழுந்தாலோ பாதிப்புகள் ஏற்படும். இன்றைய சுரங்க விபத்து மட்டுமல்ல கடந்த ஒருவார காலமாகவே காவல்துறையினருக்கு நேரம் சரியில்லாமல்தான் இருக்கிறது.

அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் பூமிக்கு காரகமான கிரகம். இந்த கிரகம் இந்த ஆண்டு எந்த பதவியிலும் இல்லை. சார்வரி ஆண்டு பிறக்கும் போது செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்றிருந்தார்.

கூடவே குரு நீச நிலையிலும் சனி ஆட்சி பெற்றும் இருந்தார். இந்த கிரகங்களின் கூட்டணியால் இந்தியாவின் பலம் உயரும் அண்டை நாடுகள் நம் நாட்டைப் பார்த்து பயப்பட நேரிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

பூமியில் இருந்து எடுக்கும் பொருட்களில் விலை குறையும். அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்படும். வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகாலங்களில் மழை, வெள்ளம் பற்றியும், தற்போது கொரோனா வைரஸ், வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு வரை பஞ்சாங்கம் கணித்தது பலித்துள்ளது. அதே போல தற்போது சுரங்க விபத்துக்களும் அடிக்கடி நடக்கும் என்று கணித்திருப்பது போல பலித்துள்ளது.

சார்வரி வருடத்தில் மழை வெள்ளம் பலமாக இருக்கும் கொல்கத்தா, மும்பை, கேரளா, தமிழ்நாடு வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும் என்று கணித்துள்ளதால், இதுவும் பலிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.