இலங்கை வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை, வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டுவருகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இன்று (ஜூலை 3) வெள்ளிக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாயை எட்டியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இலங்கையில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789 டொலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதன்படி கடந்த ஜூன் 18ஆம் திகதியிலிருந்து இன்று வரை, சர்வதேச தங்கம் விலை ஆயிரத்து 722 டெலரில் இருந்து ஆயிரத்து 789 டாலரைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 3) வெள்ளிக்கிழமை 22 கரட்ஆபரணத் தங்கத்தின் விலை 85 ஆயிரத்து 700 ரூபாயாகக் காணப்படுகிறது.

அதேபோல 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று 93 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்படுகிறது.