இலங்கையில் திருமணம் முடிப்பவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி!

நாட்டில் திருமண நிகழ்வுகளில் விருந்தினர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி திருமண நிகழ்வுகளில், 300 விருந்தினர்கள் கலந்து கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், திருமண மண்டபத்தின் ஆசனக் கொள்ளவில், 50 வீதத்துக்கும் குறைவான விருந்தினர்கள் மாத்திரம் அழைக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான அனுமதி ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய அனைவரும் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றல் மணமக்கள், உட்பட அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.