நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பூசகர் ! யாழில் சம்பவம்

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஆலய திருப்பணி உண்டியல் ஆலய பூசகரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் ஆலய உரிமம் சம்மந்தமான வழக்கில் ஆலய பூசகருக்கு சாதகமாக வழக்கு தீர்ந்ததும் அது சம்மந்தமான மேன் முறையீடு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இது இவ்வாறு இருக்க ஆலய பூசகரால் திருப்பணி உண்டியல் நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் திறப்பு பரிபாலன சபையிடம் உள்ள நிலையில் அதனை வழக்கறிஞர் மூலமோ அன்றி நீதிமன்றம் ஊடாகவோ திறப்பை பெற்றுக்கொள்ளாமல், இரவில் உண்டியலை உடைத்த செயல் ஊர் மக்களிடையேயே விசனத்தை உருவாக்கியுள்ளது.

அது மட்டும் அன்றி இரவு நேரத்தில் ஊராரின் பிரசன்னம் இல்லா நேரத்தில் இவ்வாறு செய்ய வேண்டிய தேவை என்ன என்றும் உண்மையான உள்நோக்கம் என்ன என்று ஊரார் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்னர் விபத்தில் தானாகவே சிக்கி கொண்டு தன்னை கொலை செய்ய வந்ததாக கூறிய இந்த பூசகர், தானே உண்டியலை உடைத்து விட்டு ஊராரின் தலையில் அதனை போடும் முற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.

எனினும், உண்டியல் உடைக்கப்பட்டமையை அந்த பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர். இதனால் இந்த பிரச்சினை மக்கள் மீது சுமத்தப்படவில்லை எனவும் அந்த பகுதி பொது மக்கள் கூறியுள்ளனர்.

அது மட்டுமன்றி இந்த பூசகரது இந்த அடாவடி தனமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் குருமார் ஒன்றியம் மீது மக்கள் விசனம் தெரிவித்தனர்.