கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் சம்பவத்தில், மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கனடாவின் Toronto-வில் உள்ள Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி இலங்கையை சேர்ந்த Theepa Seevaratnam என்ற 38 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ தினத்தன்று உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு பொலிசாருக்கு இரண்டு பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதில் ஒருவர் தான் Theepa Seevaratnam. இவரின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் உயிரிழந்துவிட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையின் யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைப் பிறப்பிடமாக கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்று கூறப்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Steadley Kerr வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த Gary Samuels(27) Toronto-வை சேர்ந்த Vijendran Balasubramaniam(42) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரின் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 7-ஆம் திகதி Gary Samuels-ம் 8-ஆம் திகதி Vijendran Balasubramaniam நீதிமன்றத்தில் ஆஜரானதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.