யாழில் பண பையை பறிகொடுத்த இளம் பெண்..! 10 நாட்களின் பின்னர் சிசிரிவி உதவியால் சிக்கிய பெண்!

கடந்த 30ம் திகதி காலை கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து பண பையை திருடிய பெண் கண்டுபிடிக்கப்படுள்ளார்.

அத்துடன், அவரிடமிருந்து பணம், மற்றும் தங்க மோதிரம் எனபன மீட்கப்பட்டிருக்கின்றது.

ைணைக்கோட்டை வீதியில் கேணியடியை அண்டிய பகுதியில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் குடும்ப பெண் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி காலை பணிக்கு புறப்பட்டபோது மோட்டார் சைக்கிள் ஆவணத்தை எடுக்கவில்லை என்ற ஞாபகம் வரவே வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே சென்று சில நிமிட இடைவெளியில் ஆவணத்தை எடுத்து வந்துள்ளார்.

இவ்வாறு ஆவணத்தை எடுக்க செல்லும்போது தனது கைபையினை வைத்து சென்ற நிலையில் திரும்பிவந்தபோது அது திருடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பதறியடித்து அவர் வீதியால் பயணித்தவர்களை தேடியபோதும் கைப் பை கிடைக்கவில்லை. குறித்த பையில் ஒரு லட்சம் ரூபா பணமும் , ஒரு தங்கப்பவுண் மோதிரமும் இருந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறையிடப்பட்டுள்ளதோடு அப் பகுதியில. இருந்த சீ.சீ.ரிவி கமரா மூலம் தேடும் பணிகள் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற முதல் முயற்சியில் பையும் பையில் இருந்த கைத் தொலைபேசியினையும் மீட்டுள்ளனர்.

அதனை வைத்திருந்த இரும்பு வியாபாரி வழங்கி தகவலின் அடிப்படையில் குறித்த பை இருந்து மீட்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடாத்தியதில் இரு சீ.சீ.ரி கமராக்கள் அருகில் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டன.

இதனையடுத்து அவ்விரு கமராவினையும் பரிசோதித்தவேளையில் ஓர் குடும்ப பெண்மணியே துவிச்சக்கர வண்டியில் வந்து பையை வீசும் காட்சி தெளிவாக இனம்காணப்பட்டது.

அதோடு அப் பெண்மணியின் முகமும் இனம்காணப்பட்டதை அடுத்து புகைப்பட உதவியுடன் பெண்மணியின் வீடு கண்டறியப்பட்டு நேரில் சென்ற சமயம் குறித்த பையில் இருந்த்தாகத் தெரிவித்து 41 ஆயிரத்து 500 ரூபா பணமும் ஒரு பவுன் மோதிரத்தையும் உரியவர்களிடம் அவர் மீள வழங்கியுள்ளார்.

இருப்பினும் பையை பறிகொடுத்த பெண் தனது கைப்பையில் ஒரு லட்சம் ரூபா இருந்ததாக கூறுவருகின்றார்.

இதேவேளை பணத்தை பறி கொடுத்தவரின் உடன் பிறப்புக்களின் விடா முயற்சியின் பயனாக இழந்த பொருள் அவருக்கு மீளக் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.