ஊரடங்கின் போது வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்

பிரித்தானிய இளவரசி ஆன், தமக்கு மிகவும் நெருக்கமான தொண்டு நிறுவனம் ஒன்று, மூடப்படுவதாக வெளியான செய்தியை கேட்டு மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மிருகங்கள் மீது குறிப்பாக குதிரைகளிடம் அதிக அக்கறை கொண்டவர் பிரித்தானிய ராணியாரின் மகள் இளவரசி ஆன்.

இவருக்கு மிகவும் நெருக்கமான தொண்டு நிறுவனமாக கடந்த 77 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது விலங்குகளுக்கான சுகாதார அறக்கட்டளை.

குறித்த அறக்கட்டளைக்கு தமது 19-வது வயதில் முதன் முறையாக வருகை தந்த இளவரசி ஆன், அதன் பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டு அதன் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்த அறக்கட்டளையின் நோக்கமானது உலகில் எந்த நாய், பூனை அல்லது குதிரையும் நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதே.

மேலும் இந்த அறக்கட்டளையானது நோயறிதல், தடுப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்டவைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது.

இருப்பினும், போதுமான நிதி இல்லாததால் குறித்த அறக்கட்டளையின் நம்பமுடியாத பணிகள் இனி தொடர முடியாத சூழலை எட்டியுள்ளது தமக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இளவரசி ஆன் தெரிவித்துள்ளார்.

மிருகங்களுக்கான இந்த அறக்கட்டளை மூடப்படும் சூழலை தடுக்க, இளவரசி ஆன் உரிய அதிகாரிகளுடன் பல முறை கலந்தாலோசித்தும் இறுதியான முடிவை எட்டாமல் போயுள்ளது.

தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில், அந்த அறக்கட்டளையானது தங்களது நிலையை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த அறக்கட்டளையை முன்னெடுத்துச் செல்ல பல மாதங்களாக நிதியுதவி பெற முயற்சித்ததாகவும், இறுதியில் அறக்கட்டளையின் செயற்பாட்டை நிறுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.