சுகாதார பணிப்பாளர் விடுத்த அவசர அறிவிப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு வெளியேறிய கைதிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை குறிப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைக்கப்பட்டுபவர்கள் பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டுவதாகவே அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீள அழைக்கப்பட்டும் கைதிகள் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை எனவும் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

விடுமுறையில் சென்றிருந்த கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு மீள சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுவரை சமூகமளிக்காதவர்களை உடன் மீளத்திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வருகைத்தருபவர்களை தொடர்ந்தும் PCR பரிசோதனைகளுக்கு உட்ப்பட்டுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சேவையாளர்களின் குடும்பத்தினரை சுய தனிமைப்பட்டுத்தலுக்கு உட்ப்பட்டுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கபட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்காக வந்தவர்கள் 116 பேர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like